24 March 2013

முஸ்லிம்களின் இருப்பும், தலைவர்களின் பொறுப்பும்!

பேரினவாதக் கும்பலினால் சேதமாக்கப்பட்ட தம்புள்ள பள்ளிவாயலில் மீண்டும் தொழுகை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுதப்பட்ட கவிதை

 - மதியன்பன் -

கவலை கொண்டோர்களின்
கண்ணீர்
கரைவதற்கு முன்பாகவே
இறைவா!
உன் இல்லத்தை
உறுதிப்படுத்தி விட்டாய்....!
அல்ஹம்து லில்லாஹ்...!


பேரினவாத ஆசியுடன்
பொறுப்புள்ள
பிக்குகளும் சில மக்குகளும்
உடைத்த பள்ளியை கட்டிவிடலாம்.
ஆனால்-
உடைந்து போன உள்ளங்களை
யார் கட்டுவது...?

முஸ்லிம்களுக் கெதிரான
அடக்குமுறை அடாவடி
இது ஒன்றும் புதிதல்ல.
ஆனால்-
நாம் புரியாமல் இருப்பதே
புதிராக இருக்கிறது!

மத சமய கலாசாரம்
அடிப்படை உரிமை
இதைக் கூடவா
இனவாதிகளால் வழங்க முடியவில்லை.

அமைச்சர்களே..?
அரசியல் தலைவர்களே..!
கட்சி அரசியலை மறந்து
ஒன்று படுங்கள்!
மன்னிப்போம் மறப்போம் என்று
மீண்டும்
மண்டியிடாதீர்கள்..!
மக்கள் தந்த ஆணை உங்களுக்கு!
நீங்கள்
பாராளுமன்றத்தில்
பகிரங்கமாக கண்டியுங்கள்!
முடியாவிட்டால்
பதவிகளை
தூக்கி வீசுங்கள் அல்லாஹ்வுக்காக..!

பள்ளியின் இருப்பை
இறுதிவரை உறுதிப்படுத்துங்கள்..!
காடைத்தனம் புரிந்தவர்களை
நீதிக்குமுன் நிறுத்துங்கள்!
இனிமேல் இந்த நிலை
எங்கும் தொடராதிருக்க
உத்தரவாதம் பெற்றுக் கொள்ளுங்கள்!

இறைவா
எம்மனைவருக்கும்
தைரியத்தையும், பக்குவத்தையும்
தந்தருள்வாயாக...! ஆமீன்

நன்றி – காத்தான்குடி இன்போ

No comments:

Post a Comment