தலைப்பு – புரிய வில்லை
பிரியமானவளே.!
எங்கள்
குடும்ப வைத்தியர் சொன்னார்
எனக்கு
எவளோ ஒருத்தியின்
நினைவுக் காய்ச்சலாம்
அதற்கு நான்
மறதிமாத்திரை
சாப்பிட வேண்டுமாம்
என்னால்
எப்படி முடியும்..?
நான் நனைந்தது
உந்தன்
அன்பு மழையில் அல்லவா
அதனால்தானே
எனக்கு
நினைவுக்காய்ச்சல்
நீடித்தது
உனை மறக்க
நான்
மாத்திர சாப்பிடுவதா
வேண்டாம்
காலமெல்லாம்
உன் நினைவில்;
காய்ச்சலாகவே இருக்கிறேன்.
நன்றி - தினகரன் வாரமஞ்சரி
No comments:
Post a Comment