- மதியன்பன்
அழக்கூட முடியவில்லை
அடைத்துப் போகிறது நெஞ்சு!
உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா..!
உன் மரணச் செய்தி
இன்னும்
மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்!
சுவனத்துக் குயிலே!
உன் விடுதலைக்காய்
எத்தனை உள்ளங்கள்
இரவு பகல் அழுதன தெரியுமா..?
எல்லாம் முடிந்து விட்டது.
இறைவன்
அழைத்துக் கொண்டான் உன்னை!
என்று நம்புகிறோம்
ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.
றிஸானா!
செல்லமாய் விளையாடும்
சின்ன வயதில்
சிறை சென்ற வண்ண மொட்டு நீ..
அதைக்கூடத் தாங்காமல்
உன்பெற்றோர்
தீயில் விழுந்த புளுவாய்
தீந்து போனதை நாம் அறிவோம்.
இப்போது
இறந்துபோனதை எப்படி
ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..!
உன்
மரணச் செய்தி கேட்டவுடன்
தாய் மொழிந்த வார்த்தைகள்
'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?'
இன்னும்
இதயங்களை அரித்துக் கொண்டிருக்கிறது.
இலவு காத்த கிளி என்பார்களே..!
அப்படித்தான் நாங்களும்..
இத்தனை ஆண்டுகளாய்
நீ வருவாய் என
நம்பியே வெம்பிப் போனோம்.
எத்தனை மனுக்கள்
நீ விடுதலை பெற வேண்டும் என்று!
அத்தனையும்
காற்றோடு கரைந்து விட்டனவா..?
தூது கொண்டு சென்றவர்கள்
வரும்போது
மரணத்தூதையா மடியில் சுமந்து வந்தர்கள்...?
மார்க்கத் தீர்ப்பை மதிக்கிறோம்
ஆனால்
மன்னிக்கவில்லை என்பதைத்தான்
எங்களால்
மன்னிக்கமுடியவில்லை..!
றிஸானா..!
குடும்பச்சுமையை குறைப்பதற்காகத்தான்;
நீ
விமானம் ஏறி வெளிநாடு சென்றாய்..!
இப்போது
உன் இழப்பே பெரும் சுமையாகி விட்டது
உன் குடும்பத்தாருக்கு...
றிஸானா
மற்றவர்களின் வருவாய்க்காய்
உன்னை சருகாக்கி விட்டார்களே..!
முதலில்
முகவர்களைத்தான்
தூக்கிலே தொங்க வைத்திருக்க வேண்டும்.
இப்போது
தவறு தவணை கேட்டு நிற்கிறது.
றிஸானா
இன்னும் இரண்டு நாட்களில்
எல்லோரும் மறந்து விடுவார்கள்
உந்தன் குடும்பத்தைத் தவிர....
அப்போது
ஆறுதல் சொல்ல யாரும் வரமாட்டார்கள்.
மௌன அஞ்சலி, மனமுருகும் அறிக்கைகள்
மௌத்து விசாரணைகள்
அரசியல் வாதிகளின் அனுதாப அலைகள்
தலைவர்களின்
தாமதித்த வருகைகள்
இப்படி இன்னும் இன்னும்
இவை
ஒரு போதும் உன் இழப்புக்கு ஈடாகாது.
உன்னைப்போல்
இன்னும்
எத்தனைபேர் ஏமாறப் போகிறார்கள்...?
யார் பொறுப்பை ஏற்றுக்கொள்வது..?
பெற்றவர்களா..?
எதையுமே கண்டு கொள்ளாத சமூகமா..?
பணம் பறிக்கும் முகவர்களா..?
புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்..
இது பாடமாகட்டும்
பெண்களை ஜித்தாவுக்கு அனுப்பிவிட்டு
இங்கே
இத்தா இருக்கும் ஆண்களுக்கும்
இன்னும்
சீதனச் சந்தையில் விலைபோக முடியாமல்
வாழ்வை அமைத்துக் கொள்ள
வெளிநாடு போகும் யுவதிகளை
பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும்..
றிஸானா
நீ சொர்க்கத்துக்கு சொந்தக்காரி
உன் இழப்பால்
உருகும் உள்ளங்களின்
பிராhத்தனைகள் என்றும் உனக்குண்டு!
வல்ல அல்லாஹ்
வழங்குவான் உனக்கு சுவர்க்கத்தை..
ஆமீன்!
அழக்கூட முடியவில்லை
அடைத்துப் போகிறது நெஞ்சு!
உள்ளத்தில் உறைந்தவளே றிஸானா..!
உன் மரணச் செய்தி
இன்னும்
மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்!
சுவனத்துக் குயிலே!
உன் விடுதலைக்காய்
எத்தனை உள்ளங்கள்
இரவு பகல் அழுதன தெரியுமா..?
எல்லாம் முடிந்து விட்டது.
இறைவன்
அழைத்துக் கொண்டான் உன்னை!
என்று நம்புகிறோம்
ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம்.
றிஸானா!
செல்லமாய் விளையாடும்
சின்ன வயதில்
சிறை சென்ற வண்ண மொட்டு நீ..
அதைக்கூடத் தாங்காமல்
உன்பெற்றோர்
தீயில் விழுந்த புளுவாய்
தீந்து போனதை நாம் அறிவோம்.
இப்போது
இறந்துபோனதை எப்படி
ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..!
உன்
மரணச் செய்தி கேட்டவுடன்
தாய் மொழிந்த வார்த்தைகள்
'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?'
இன்னும்
இதயங்களை அரித்துக் கொண்டிருக்கிறது.
இலவு காத்த கிளி என்பார்களே..!
அப்படித்தான் நாங்களும்..
இத்தனை ஆண்டுகளாய்
நீ வருவாய் என
நம்பியே வெம்பிப் போனோம்.
எத்தனை மனுக்கள்
நீ விடுதலை பெற வேண்டும் என்று!
அத்தனையும்
காற்றோடு கரைந்து விட்டனவா..?
தூது கொண்டு சென்றவர்கள்
வரும்போது
மரணத்தூதையா மடியில் சுமந்து வந்தர்கள்...?
மார்க்கத் தீர்ப்பை மதிக்கிறோம்
ஆனால்
மன்னிக்கவில்லை என்பதைத்தான்
எங்களால்
மன்னிக்கமுடியவில்லை..!
றிஸானா..!
குடும்பச்சுமையை குறைப்பதற்காகத்தான்;
நீ
விமானம் ஏறி வெளிநாடு சென்றாய்..!
இப்போது
உன் இழப்பே பெரும் சுமையாகி விட்டது
உன் குடும்பத்தாருக்கு...
றிஸானா
மற்றவர்களின் வருவாய்க்காய்
உன்னை சருகாக்கி விட்டார்களே..!
முதலில்
முகவர்களைத்தான்
தூக்கிலே தொங்க வைத்திருக்க வேண்டும்.
இப்போது
தவறு தவணை கேட்டு நிற்கிறது.
றிஸானா
இன்னும் இரண்டு நாட்களில்
எல்லோரும் மறந்து விடுவார்கள்
உந்தன் குடும்பத்தைத் தவிர....
அப்போது
ஆறுதல் சொல்ல யாரும் வரமாட்டார்கள்.
மௌன அஞ்சலி, மனமுருகும் அறிக்கைகள்
மௌத்து விசாரணைகள்
அரசியல் வாதிகளின் அனுதாப அலைகள்
தலைவர்களின்
தாமதித்த வருகைகள்
இப்படி இன்னும் இன்னும்
இவை
ஒரு போதும் உன் இழப்புக்கு ஈடாகாது.
உன்னைப்போல்
இன்னும்
எத்தனைபேர் ஏமாறப் போகிறார்கள்...?
யார் பொறுப்பை ஏற்றுக்கொள்வது..?
பெற்றவர்களா..?
எதையுமே கண்டு கொள்ளாத சமூகமா..?
பணம் பறிக்கும் முகவர்களா..?
புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்..
இது பாடமாகட்டும்
பெண்களை ஜித்தாவுக்கு அனுப்பிவிட்டு
இங்கே
இத்தா இருக்கும் ஆண்களுக்கும்
இன்னும்
சீதனச் சந்தையில் விலைபோக முடியாமல்
வாழ்வை அமைத்துக் கொள்ள
வெளிநாடு போகும் யுவதிகளை
பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும்..
றிஸானா
நீ சொர்க்கத்துக்கு சொந்தக்காரி
உன் இழப்பால்
உருகும் உள்ளங்களின்
பிராhத்தனைகள் என்றும் உனக்குண்டு!
வல்ல அல்லாஹ்
வழங்குவான் உனக்கு சுவர்க்கத்தை..
ஆமீன்!
No comments:
Post a Comment