கல்முனை கடற்கரைப் பள்ளிவாயலில் இஸ்லாத்திற்கு விரோதமான முறையில் கொடி ஏற்றப்பட்டதையும், அங்கு நடைபெறும் ஏனைய நிகழ்வுகளையும் கண்டித்து எழுதிய கவிதை
-மதியன்பன் -
பறிபோவது
பள்ளிவாயல் மட்டுமல்ல
எமது ஈமானும் தான்..?
ஏறும் கொடியோடு
இறங்கிப் போகிறது
எமது ஈமான்
கல்முனை கடற்கரைப் பள்ளியில்..!
வணங்கப்பட வேண்டிய
வழிபாட்டுத்தலங்கள்
தரைமட்டமாக்கப்படும் போது
உடைத்தெறிய வேண்டிய
தர்ஹாக்கள்
உயிரூட்டப் படுகின்றன.
தம்புள்ள பள்ளிவாயலை
தகர்த்தெறிவதற்கு
பேரினவாதிகள்
பிரயத்தனம் எடுக்கிறார்கள்.
இங்கே
கடற்கரைப் பள்ளியில்
களியாட்டத்துடன்
கொடியேற்றம் நடக்கிறது.
பள்ளியை உடைத்தளிக்க
அங்கே
பௌத்தர்கள் ஆசி வழங்க-
ஈமானை இல்லாதொழிக்க
இங்கே
ஆலிம்கள் ஆசி வழங்குகிறார்கள்.
தம்புள்ளயில்
பள்ளி உடைக்க வரும்
பௌத்தர்களின் கொடிக்கும்
கடற்கரைப் பள்ளியில்
ஈமானை இடிக்கவரும்
இவர்களின் கொடிக்கும்
என்ன வேறுபாடு கண்டோம்
கபுறுகளை உடைத்தெறிய
கட்டளை பிறப்பித்த
நபிகளின் வாரிசு நாம்!
கம்புக்கு மண்கூட்டி கடலுக்கு சோறூட்டி
கபுறுக்கு
மலர்மாலை அணிவித்து
பாலாபிசேகம் செய்கிறோம்.
உலமாக்களே..!
ஓதுங்கள் குத்பாக்கள்
இவையெல்லாம்
இஸ்லாத்தில் இல்லை என்று.!
தடுத்து நிறுத்துங்கள்
இந்த
தர்ஹா வழிபாட்டையும்
சிர்க்கையும், பித்அத்தையும்.
மரணித்துப் போனவர்களால்
ஒன்றுமே செய்ய முடியென்பதை
மார்தட்டிச் சொல்லுங்கள்
பூமிக்கு மேலுள்ள கப்றுகளை
உடைக்கச் சொன்ன
அந்த உத்தம நபியின்
உயரிய வார்த்தைகளை
உரத்துச் சொல்லுங்கள்.
அல்லாஹ்வைத் தவிர
வேறு யாரிடமும்
நீங்கள்
கையேந்த வேண்டாம் என்பதை
கண்டிப்பாகச் சொல்லுங்கள்.
உலமாக்களே..!
எல்லோரும் ஓரணி திரளுங்கள்
இறை ஆணையை நிறைவேற்ற
பேரணி திரளுங்கள்.
தர்ஹா வழிபாட்டுக்கு
தடைவிதிக்கப் போராடுங்கள்
நமது வீதிகளில்
ஆர்ப்பாட்டங்களை
ஆரம்பித்து வையுங்கள்.
ஊலமாக்களே..
நபிமார்களின் வாரிசுகள் நீங்கள்
உங்கள் வார்த்தைகள்
மக்களுக்கு உரம்
அதை விசமாக்கிவிடாதீர்கள்
கஃபாவை இடித்தாலும்
மூன்று தினங்களுக்கு மேல்
கவலைப்பட மாட்டோம்
என்பதை
நிரூபித்து விடாதீர்கள்
இஸ்லாமிய ராஜ்யத்தின்
ஈமானிய இளைஞர்களே..
இங்கேதான் தேவை
உங்கள் புனிதப் போராட்டம்
புறப்பட்டு வாருங்கள்
ஈமானை இடிக்கவரும்
இந்த சாமானியர்களுடன்
சண்டையிட்டாவது
சொர்க்கத்துக்கு சொந்தக் காரராகுங்கள்.!
நன்றி – காத்தான்குடி இன்போ
No comments:
Post a Comment