24 March 2013

உங்களுக்கும் ஒருசிலைவைக்கலாம்...?


காத்தான்குடி  ஆரையம்பதி  பிரதே எல்லையில்  நிர்மாணிக்கப்பட்டிருந்த  சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை  இனந் தெரியாதவர்களினால்  உடைத்து சேதமாக்கப்பட்டதையடுத்து  அதனை மீள் நிர்மானம் செய்து  திறந்து வைத்தபோது  அந்த உருவச் சிலைக்கு நமது ஊர்த்தலைவர்களும் மலர்மாலை அணிவித்ததைக் கண்டித்து எழுதிய கவிதை
 -மதியன்பன் -
சிலைக்குமாலைபோட்ட
செம்மல்களே!
மார்க்கத்தில் அனுமதியிருந்தால்
உங்களுக்கும்
ஒருசிலைவைத்துவிடலாம்.


இக்கட்டில் மாட்டிக் கொண்டோம்
என்றுதான் மாலைபோட்டோம்
இப்படியாகுமென்று
எண்ணவில்லை கனவில் கூட!
தப்பிக் வழியுமில்லை.
தவறென்று சொல்லுதற்கு
தைரியமும் எமக்கு இல்லை.!
இப்படிச் சொல்லாதீர்கள்..!

சம்மேளனத் தலைவரே!
சங்கடம் என்றுசொல்லி
சமாளித்துவிடாதீர்கள்.!
உங்கள் செயல் பார்த்து
நம் சமுதாயமே
தலை குனிந்து நிற்கிறது.

எதற்குமே வரிந்து கட்டும்
இளயதளபதி பரீட்!
என்னாச்சு உங்களுக்கு!
நீங்கள் தஃவா அமைப்பின்
தவப் புதல்வன் அல்லவா..?

புரட்சி செய்யப் புறப்பட்ட
ஹாறூன் அவர்களே!
சிலைக்கு மாலை போட்டு
சேற்றைபூசிக் கொண்டீர்களே..?

சபை அமர்வுகளிலெல்லாம்
சத்தியத்திற்காக போராடுவீர்களே..?
எங்கே போனது
உங்கள் சத்தியமும். சன்மார்க்கமும்

பதவிவிலகலோடு
அதுவும் பறிபோய்விட்டதா..?
விசாரிக்க வேண்டிய நீங்களே
இன்று விசாரணைக் கூண்டில்..
வேடிக்கையாக இருக்கிறது

புரட்சியால்
புடம் போடத் துடிக்கும்
முபீன் சேர்!
நீங்களுமா நிலைகுலைந்து போனீர்கள்,?

உங்களுக்கு
மக்கள் வாக்களித்தது
மாற்று மதத்தவர்களுக்கு
மகுடி ஊதுவதற்கல்ல.
ஊரை வழி நடாத்தும்
உயர்ந் தநோக்கத்துக்காகத்தான்

என்னசெய்கிறீர்கள்..?
சிலைக்கு மாலைபோட்டு
சிறப்புச் செய்துள்ளீர்கள்!
சமாளிப்பதற்கும்
சார்ந்துபோவதற்கும்
இதுஒன்றும்
சாகித்ய விழாவல்ல.
புனிதமதம் இஸ்லாத்தின்
போதனைகளை
புறந்தள்ளிவிட்டீர்களே..!

குத்துவிளக் கேற்றலும்
மலர்மாலை அணிவிப்பும்
அடுத்தவர் கலாசாரம் என்றாலும்
அது
வணக்கவழிபாட்டின்
வாயிலாகவும் உள்ளதல்லவா..?
எங்களை நீங்கள்
அரசியலில்தான்
அனாதையாக்கினீர்கள்.
இப்போது
மார்க்க விடயத்திலுமா
மந்தைகளாக்கப் பார்க்கிறீர்கள்.

சிலை சுமந்த ஊர்வலம்
பட்டாசு வாத்தியம்
மாலை மரியாதை
பாலபிசேகமெல்லாம்
நமதுமார்க்கத்தில்
கூடாத செயலென்று
குழந்தைக்கும் தெரியுமல்லவா..?
நீங்கள்
குழந்தைகளா ? குருடர்களா..?

உறவுக்குப் பாலம் தேவை
அதற்காக
உருவச் சிலைக்கு மாலைபோட்டு
ஊருக்குப் பாலம் போடலாமா..?

முற்போக்கு அரசியலின்
மூத்தவர்களே!
எங்கேபோனது
உங்கள் தர்பியாக்களும், தத்துவங்களும்;...
இங்கே
சமாதியாகி நிற்கிறது
ஒருசத்தியத்தின் தொடக்கம்

சம்மேளனத்தை
இனிமேல்
தாய்வீடென்று
தம்மட்டம் அடிக்கதீர்கள்!
சன்மார்க்கத்தையும்
தன்மானத்தையும்
அன்னியரிடம் தாரைவார்த்து
தரை மட்டமாக்கி விட்டீர்களே..?
ஊரை வழி நடாத்தும்
உலமாக்களே..!
உங்கள் பத்வாக்கள் என்ன.?
வருகின்ற குத்பாக்களிலாவது
உருப்படியாய் உறைக்கும் படியாய்
உண்மையைச் சொல்வீர்களா..?

அயலவர் நேசத்திற்காக
கோசம் போடலாம்
ஆனால் வேசம் போடலாமா..?
இங்கேபோடப்பட்டது
கோஷமா...வேசமா..?

காவியுடைச் சமாச்சாரத்தை
கண்டித்தது
இன்னும் காலாவதியாகவில்லை
அதற்குள்
சிலைக்கு மாலைபோட்டு
இன்னுமொரு
சிறுபிள்ளைத்தனம் செய்துவிட்டீர்களே..?

பணத்திற்கும் பசிக்கும்
எங்கோ
உடல் விற்கிறாள் தாசி!
இங்கே..
புதவிக்கும், பட்டத்திற்கும்
பறிபோயிருக்கிறது
எம்மதக் கோட்பாடு..!

இந்த சிலையின் பின்னால்
இன்னும்
எத்தனை தலைவர்களோ..?
பொறுத்துப் பார்ப்போம்.

நன்றி – காத்தான்குடி இன்போ

No comments:

Post a Comment