10 June 2013

நாய் கிண்டிய மடுவுக்குள்.


-மதியன்பன்-

நாய் கிண்டிய
மடுவுக்குள்
நட்டிவைத்த மரங்களாய்
நமது தலைவர்கள்...

அடுப்பங்கரைப் பூனையாய்
அவர்கள்
அசந்து தூங்குகிறார்கள்...

பூனையும் - நாயும்
படுத்துறங்கும் இடமாய்
பரிணமித்துப் போனது
நமது தேசிய கட்து கட்சி..

எதையுமே
கண்டு கொள்ளாத
குறுட்டு வெளவால்களாய்
அவர்களும் - நாங்களும்..
அப்போதும் இப்போதும்...

தண்ணீரில்
தலை துவட்டிய எருமைகளாய்
இன்னும் அவர்களோடு
இணைந்;திருக்கிறோம்
எதையுமே கண்டு கொள்ளாமல்..

சிங்கத்தின் கூட்டுக்குள்
சிக்கிய மானினமாய்..
தினமும்
சிதைக்கப்படுகிறது நம் சமூகம் !

பொறிக்குள் அகப்பட்ட
எலிகளாய்
குரல்வளை நசுங்குகையில்
ஆட்சி நிலைப்பதற்கு
ஆசி வழங்குகிறது நமது தலைமை..

பற்றியெரியும்
பள்ளிவாயல்களை
அறிக்கைகள் மாத்திரம்
அணைத்துவிடாது..

இருந்தபோதும்
வாலாட்டும் நாய்களுக்கு
தாலாட்டும்
ஒரு வக்கற்ற சமூகமாக
மாறிப்போனோம் நாம்...

(இக்கவிதை யாரையும் தாக்குவதற்கல்ல..)






 


1 comment:

  1. இது யாரையும் தாக்குவதற்கில்லை என்பது உண்மை.....
    இதைப் படித்தும் அவன் தாக்கம் பெறவில்லையென்றால்??????
    அவன் அழிந்து போக நான் சாபமிடுகிறேன்.........

    ReplyDelete