18 August 2013

ஈமானுக்காய் போராடும இரத்த உறவுகள்..!

 -மதியன்பன்-


ஈமானுக்காய் போராடும ;
என்
இரத்த உறவுகளே..!
எகிப்தின்
ஈமானிய நெஞ்சங்களே..


நீங்கள் சிந்தும்
ஒவ்வொரு சொட்டு இரத்தமும்
எகிப்தின்
ஈமானியச் சுடருக்கு
எண்ணையாய்  மாறும்
அந்த நாள்
வெகு தூரத்தில் இல்லை.

தஹ்ரீர் சதுக்கம்
இன்னும் உங்களை
தாங்கி நிற்கிறது
இதயமாய்..

நீங்கள்
புதைக்கப்படவில்லை
விதைக்கப்படுகிறீர்கள்
ஒருநாள்
ஈமானிய மரமாய்
எழுந்து வரப் போகிறீர்கள்.

நீங்கள்
இரத்த வெள்ளத்தில்
துடித்து இறப்பதையும்
தீயில்
கருகி மடிவதையும்
கானொளியில் காணுகையில்
கல்புகள்
வெடித்துப் போகிறது.

பஸ்பரஸ் குண்டுகளுக்குள்
பலியாகிப்போகும்
என் உறவுகளே..

உங்களின்
அழுகுரலும், அவலக்குரலும்
அடங்குவதற்குள்ளாக
அழிந்து போவார்கள்
அந்த
அநியாயக்காரர்கள்..

பால்குடிக்கும்; குழந்தைகளை
பலிகொடுத்த பின்பும்
வீரத்தோடு போராடும்
எங்கள்
தாய் குலத்தின் தைரியமும் ,
கலிமாவின் கம்பீரமும்
கட்டாயம் ஒருநாள்
ஈமானிய புரட்சிக் கொடியை
எகிப்தில் ஏற்றி வைக்கும்

என்
இரத்த உறவுகளே..
உங்களுக்காய்
தொழுகிறோம்
நோன்பு நோற்கிறோம்
அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
கூடவே
உங்கள் தியாகத்திற்கும்
ஆடி பணிகிறோம்.





1 comment:

  1. என் அருமைக் காதலரே
    எகிப்து தேசப் புதல்வரே
    ஏகத்துவம் சுமந்த சகோதரரே
    ஏற்றம் மிகுந்த சுஹதாக்களே

    உங்கள் வீதிகளில்
    உஹதைக் காண்கிறேன்
    உச்ச வெயிலிலும்
    உறுதியை வியக்கிறேன்

    கத்ரைக்
    கல்பிலே ஏற்றோரே
    பத்ரைப்
    பார்த்தும் சிரித்தீரே

    கபனோடு உங்களைக்
    காணும் போதெல்லாம்
    கண் குளிர்ச்சிதான் - ஏனோ
    கண்ணீரும் வருகிறதே

    ஏகன் அவனையே
    ஏற்றிப் புகழ்கிறேன்
    ஏழைக் கரம்
    ஏந்திக் கேட்கிறேன்

    வசந்தம் மீண்டும்
    வந்தடையக் கேட்கிறேன்......

    www.ahathinila.tk

    ReplyDelete