-காத்தான்குடி மதியன்பன்-
நிறையவே
சேமித்திருக்கிறேன்..
ஆனால்
இருப்பு எவ்வளவு என்று
இன்னும் தெரியவில்லை.
அதிகாரிகள் கூட
இன்னும்
அறிவிக்கவில்லை
வைப்புப் புத்தகத்தை
வழங்கவுமில்லை.
சேமிப்புக் கணக்கென்பதால்
செக்குத் திரும்பும்
சிக்கலும் இருக்கவில்லை.
இரவு பகலாக உழைத்தே
இத்தனையும்
சேமித்திருக்கிறேன்.
அதற்காக
தூக்கமிழந்தேன்
சாப்பாட்டைத் தவிர்த்தேன்.
எனது சேமிப்பில்
பிள்ளைகளுக்கும்
பெரும் பங்கு வைத்திருக்கிறேன்.
அவை
வட்டியில்லாமல்
வளர்ந்து கொண்டிருக்கிறது.
பகலில் உழைப்பது
போதவில்லை என்பதற்காய்
இரவு நேரத்திலும்
ஓவர் டைம் செய்தேன்
ஓய்வின்றி உழைத்தேன்.
அதற்காக
முன்னிரவை விட
பின்னிரவைத் தெரிவு செய்தேன்.
ஊரே உறங்கும்போது
நான்
உணர்வுகளைக் கட்டுப்படுத்தினேன்
உள்ளத்தை
சுத்தப்படுத்தினேன்
சேமிப்பை மிச்சப்படுத்தினேன்.
நான்
சேமித்தவையலெ;லாம்
பத்திரமாய்
பிக்ஸட் டிபோசிட்டில்
பேணிவருவதாக
உண்மைச் செய்தியொன்று
உறுதிப்படுத்தியது.
எனது உழைப்பிலும்
சேமிப்பிலும்;
எனக்கு நம்பிக்கையிருக்கிறது
மறுமைநாள்...
மஹ்சரில் எனக்கு
வைப்புப் புத்தகம் வழங்கப்படும்
சேமிப்பையும்
சேமிக்கச் சொன்னவனையும்
என்னால் காணமுடியும்.
மாளிகை, மது, மங்கை
மனதுக்கேற்ற வாழ்கை
அத்தனையும்
அனுபவித்து வாழ முடியும்.
அந்த ஒரு நாளுக்காய்
நான்
எத்தனை துன்பங்களையும்
ஏற்றுக் கொள்ள
தயாராக இருக்கிறேன்.
மரணிக்கும வரை
சேமிப்பதற்காய்...
உழைத்துக் கொண்டே இருப்பேன்
ஒய்வின்றி..
நிறையவே
சேமித்திருக்கிறேன்..
ஆனால்
இருப்பு எவ்வளவு என்று
இன்னும் தெரியவில்லை.
அதிகாரிகள் கூட
இன்னும்
அறிவிக்கவில்லை
வைப்புப் புத்தகத்தை
வழங்கவுமில்லை.
சேமிப்புக் கணக்கென்பதால்
செக்குத் திரும்பும்
சிக்கலும் இருக்கவில்லை.
இரவு பகலாக உழைத்தே
இத்தனையும்
சேமித்திருக்கிறேன்.
அதற்காக
தூக்கமிழந்தேன்
சாப்பாட்டைத் தவிர்த்தேன்.
எனது சேமிப்பில்
பிள்ளைகளுக்கும்
பெரும் பங்கு வைத்திருக்கிறேன்.
அவை
வட்டியில்லாமல்
வளர்ந்து கொண்டிருக்கிறது.
பகலில் உழைப்பது
போதவில்லை என்பதற்காய்
இரவு நேரத்திலும்
ஓவர் டைம் செய்தேன்
ஓய்வின்றி உழைத்தேன்.
அதற்காக
முன்னிரவை விட
பின்னிரவைத் தெரிவு செய்தேன்.
ஊரே உறங்கும்போது
நான்
உணர்வுகளைக் கட்டுப்படுத்தினேன்
உள்ளத்தை
சுத்தப்படுத்தினேன்
சேமிப்பை மிச்சப்படுத்தினேன்.
நான்
சேமித்தவையலெ;லாம்
பத்திரமாய்
பிக்ஸட் டிபோசிட்டில்
பேணிவருவதாக
உண்மைச் செய்தியொன்று
உறுதிப்படுத்தியது.
எனது உழைப்பிலும்
சேமிப்பிலும்;
எனக்கு நம்பிக்கையிருக்கிறது
மறுமைநாள்...
மஹ்சரில் எனக்கு
வைப்புப் புத்தகம் வழங்கப்படும்
சேமிப்பையும்
சேமிக்கச் சொன்னவனையும்
என்னால் காணமுடியும்.
மாளிகை, மது, மங்கை
மனதுக்கேற்ற வாழ்கை
அத்தனையும்
அனுபவித்து வாழ முடியும்.
அந்த ஒரு நாளுக்காய்
நான்
எத்தனை துன்பங்களையும்
ஏற்றுக் கொள்ள
தயாராக இருக்கிறேன்.
மரணிக்கும வரை
சேமிப்பதற்காய்...
உழைத்துக் கொண்டே இருப்பேன்
ஒய்வின்றி..
No comments:
Post a Comment