
- மதியன்பன் -
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்.
இனிமேலும் என்னால்
இருக்க முடியவில்லை அரபு நாட்டில்..!
வெளிநாட்டு வாழ்கையெல்லாம்
வெறும் பகட்டு மாத்திரம்தான்..!
கனவிலே றிஸானா வந்துஎந்தன்
கண்களைத் திறந்து விட்டாள்..!
உழைத்தது போதும் என்றாள்.!
உயிர் தப்பி
ஊருக்கு ஓடச் சொன்னாள்..!
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்.
பணத்திற்காக
பாசத்தை தொலைத்து நிற்கிறோம்.
உறவுகள் இல்லாத உலகம்...!
உணர்வுகள் இல்லாத வாழ்க்கை...!
அரவணைப்பில்லாத தூக்கம்...!
அத்தனையும் போலியானவை..!
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்.
நேற்றுப் போல் இருக்கிறது
மனமில்லாமல் விமானமேறியது..!
மடியிலே
குடும்ப பாரத்தை சுமந்து கொண்டவளாய்;..!
சம்பலோடு சோறு தின்றாலும்
சந்தோசம்
குடும்பத்தோடு சேர்ந்திருந்தால்...!
குடிலுக்குள் இருந்த சுகம்
இப்போது
கோபுரத்தில் இல்லை உம்மா..!
நாங்களெல்லாம்
அறபு நாட்டின் அடிமைகள்..!
எவரும் எங்களை
மனிதனாக மதிப்பதில்லை..!
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்.
நம்ம ஊருக் குமருகள்
நாலுபேரு
நாளைக்கு வாறாங்களாம் ஊருக்கு...!
உழைத்து சேர்த்த பணத்தில்
வீடும் கட்டியாச்சாம்...!
சீதனத்துக்கு பணம் சேர்க்க
சீக்கிரம் திரும்புவாங்களாம்..!
அவங்களையும்
அல்லாஹ்தான் காப்பாத்தனும்.
சொல்லிவிடுங்கள் தகவலை..!
நம்ம ஊரு
தலைவர்களுக்கும், தனவந்தர்களுக்கும்
தாராள மனங்கொண்ட
மாப்பிளை மார்களுக்கும்;..!
ஊருக்கு வருகிறேன் உம்மா..
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்...!
கண்களைத் திறந்து விட்டாள்..!
உழைத்தது போதும் என்றாள்.!
உயிர் தப்பி
ஊருக்கு ஓடச் சொன்னாள்..!
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்.
பணத்திற்காக
பாசத்தை தொலைத்து நிற்கிறோம்.
உறவுகள் இல்லாத உலகம்...!
உணர்வுகள் இல்லாத வாழ்க்கை...!
அரவணைப்பில்லாத தூக்கம்...!
அத்தனையும் போலியானவை..!
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்.
நேற்றுப் போல் இருக்கிறது
மனமில்லாமல் விமானமேறியது..!
மடியிலே
குடும்ப பாரத்தை சுமந்து கொண்டவளாய்;..!
சம்பலோடு சோறு தின்றாலும்
சந்தோசம்
குடும்பத்தோடு சேர்ந்திருந்தால்...!
குடிலுக்குள் இருந்த சுகம்
இப்போது
கோபுரத்தில் இல்லை உம்மா..!
நாங்களெல்லாம்
அறபு நாட்டின் அடிமைகள்..!
எவரும் எங்களை
மனிதனாக மதிப்பதில்லை..!
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்.
நம்ம ஊருக் குமருகள்
நாலுபேரு
நாளைக்கு வாறாங்களாம் ஊருக்கு...!
உழைத்து சேர்த்த பணத்தில்
வீடும் கட்டியாச்சாம்...!
சீதனத்துக்கு பணம் சேர்க்க
சீக்கிரம் திரும்புவாங்களாம்..!
அவங்களையும்
அல்லாஹ்தான் காப்பாத்தனும்.
சொல்லிவிடுங்கள் தகவலை..!
நம்ம ஊரு
தலைவர்களுக்கும், தனவந்தர்களுக்கும்
தாராள மனங்கொண்ட
மாப்பிளை மார்களுக்கும்;..!
ஊருக்கு வருகிறேன் உம்மா..
ஒரு முறையேனும்
உங்கள் மடி சாயவேண்டும்...!
No comments:
Post a Comment