24 March 2013

புதுயுகம் படைக்க வாராய்..


2006 ஆம் ஆண்டு காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேர்தல் பிரச்சார மேடைகளில் படித்த கவிதை

- மதியன்பன் -

தோழா! வந்து பார்
இது
யாரையும் தாக்குவதற்கோ
அல்லது
தூக்குவதற்கோ
தொடங்கப்பட்ட
போராட்டமல்ல
என்பதைப் புரிந்து கொள்வாய்
வந்து பார்!


ஒரு
வரலாற்றுப் புத்தகத்தின்
வஸந்தத்தை
பசுமைப் புரட்சியை
தோற்றுவிப்பதன்
தொடக்கவிழா
என்பதைப் புரிந்து கொள்வாய்
வந்து பார்!

அதிகார வர்க்கத்துக்கான
அரசியல் போராட்டமல்ல
சொத்துக்களைச் சுரண்டி
சுகபோகம் அனுபவிக்கும்
சுதந்திர அரசியலுமல்ல
ஒரு
நீண்ட பயணத்தின்
சின்னத் தொடக்கம்
இது என்பதைப்
புரிந்து கொள்வாய்
வந்து பார்!

அரசியல்
இது இஸ்லாத்தோடு
இரண்டறக் கலந்தது
இதனை விளங்கிக் கொள்வாய்
வந்து பார்!

உங்களுடைய
நலங்களையும், வளங்களையும்
பாதுகாக்கும்
பாரிய
பொறுப்பில் நிற்கிறது.
என்பதைப் புரிந்து கொள்வாய்
வந்து பார்!

தன்னை உருக்கி
பிறருக்கு ஒளியூட்டும்
மெழுகுவர்த்தி சின்னம்
எங்களின்
இயக்கத் தொண்டர்களின்
தியாக எண்ணம்போல்.

தேர்தலில் வெற்றி
நகர சபையின்
ஆட்சி அதிகாரம்
இவையல்ல நமது நோக்கம்
நமது
அடிப்படை நோக்கங்களில்
இதுவும் ஒன்று
என்பதைப் புர்pந்து கொள்வாய்
வந்து பார்!

அநியாயக் காரர்களின்
ஆட்சியையும், சூழ்ச்சியையும்
நமது சின்னம்
சுட்டெரிக்கும்
லஞ்சம், ஊழல்
ரகசியக் கொடுப்பணவு
இவற்றையெல்லாம்
நிச்சயம் தொட்டெரிக்கும்
சுடரொளியை விட்டெரிக்கும்
என்பதைப் புரிந்து கொள்வாய்
வந்து பார்!

பசுமை நகரம்!
சமாதானம் சகவாழ்வு
திட்டமிட்ட அபிவிருத்தி
ஊழலற்ற நிருவாகம்
நேர்மையான அரசியல்

இது
தூய்மையின் தோற்றுவாய்
வாய்மையின் வாசற்படி
நாறிப்போன அரசியலில்
ஊறிப்போன சமூக்தை
நாகரீக அரசியலுக்கு
மாற்றுகின்ற
வேலைத் திட்டத்தின்
ஆரம்பப் பணியென்பதை
அறிந்து கொள்வாய்
வந்து பார்!

இது
மூன்றுவாரக் குழந்தை
மூச்சுவிட ஆரம்பித்ததுமே
அரசியலில் சிலபேர்
ஆட்டங்காணத் தொடங்கி விட்டனர்.
இது
நடக்கத் தொடங்கினால்
என்னவாகும்
என்பதைப் புரிந்து கொள்வாய்
வந்து பார்

இஸ்லாமிய ஆட்சி
இது
வெறும் கோசமல்ல
எங்களின் வேசமுமல்ல
ஆண்மீகப் பயிற்சியோடு
அரசியற் பயிற்சி

இஸ்லாமியத் தொணிதான்
எங்கள் பணி
இதை நோக்கித்தான்
இந்த அணி
என்பதைப் புரிந்து கொள்வாய்
வந்துபார்.

இந்த அணி
நகரசபைத் தேர்தலில்
களத்தில் நிற்கிறது
இஸ்லாமியத்
தளத்தில் நிற்கிறது.

இது
இஸ்லாமியத் தத்துவத்தின்
வித்துக்களால்
விரிந்த இயக்கம்
இதற்குள்
பட்டம், பதவியில்லை.
பதவிமோகமில்லை
சொத்து சுரண்டலில்லை
சொந்த பந்தமில்லை.

இது
சூறாவின் அடிப்படை
நாங்கள்
சொல்வதெல்லாம் வெளிப்படை.
நிச்சயம் வெல்லும்
இந்தப் புதுப்படை
என்பதைப் புரிந்து கொள்வாய்
வந்து பார்!

இதில்
இஸ்லாம் இல்லாமல்
அரசியல் இல்லை, ஆட்சியில்லை
அதிகாரமில்லை
இஸ்லாமிய
இலக்கு இல்லாமல்
எந்தவித
நோக்குமில்லை, போக்குமில்லை.
என்பதைப் புரிந்து கொள்வாய்
வந்துபார்!

சாக்கடை அhசியலுக்கு
இங்கே
சமாதி கட்டப்படுகிறது
அத்தோடு
பூக்கடை அரசியலுக்கு
புதுப்பாதை போடப்படுகிறது.


இங்கே,
தலைவன் தொண்டன்
எல்லாமே
எல்லோரும்தான்.
என்பதைப் புரிந்து கொள்வய்;
வந்து பார்!

No comments:

Post a Comment