07 May 2014

கழிவைத் தின்னும் காக்கைகள்...

மதியன்பன்


கூரையில் நின்ற காக்கைகள்
கொத்திக் கொத்தி
இப்போது
உள்வீட்டுக்குள் வந்து
உட்கார்ந்து கொண்டது..

குருவிகள் கட்டிய
கூட்டையும்
அந்தக் காக்கைகள்
குலைத்து விடத் துடிக்கிறது..


கழிவுகளைத் தின்றுதின்று
பழகிப் போனதால்
நல்ல உணவுகள் அவற்றிக்கு
நாறியதாய் தெரிகிறது...

கூட்டுக்குள் வளர்ந்த
குயில்களையும்
அந்தக் காக்கைள்
கொத்தித் துரத்தி விட்டது.

இந்த
எழிய காக்கைகளின்
எச்சில் நீரைச் சுவைப்பதற்கு
சில
பச்சிகள் பறந்து திரிகிறது..

உணவு கிடைத்தால்
காக்கைகள்
உரத்த குரலில்
தன் இனத்தை அழைத்துக் கொள்கிறது
நாய்கள்
அவற்றை செய்வதில்லை..

வீட்டுக் காவலுக்கு
வளர்க்கும் நாய்களோ
காக்கைகளை விரட்ட முடியாமல்
எங்கிருந்தோ
குரைத்துக் கொண்டிருக்கிறது...

ஆனால்
காக்கைகளின் கூடு
காவல் படைகளால்
பத்திரமாய் பாதுகாக்கப்படுகிறது.

07.05.2014












No comments:

Post a Comment