03 May 2014

பொழுது புலர்வதற்குள் புதைத்து விட வேண்டும்

மதியன்பன் 

பதினெட்டுப் பழத்தில்

இரண்டு
பழுது பட்டு விட்டது
பொழுது புலர்வதற்குள்
இதனை
புதைத்து விட வேண்டும்

இனிமேல் யாரும்
இவற்றை
பழமென்று பறை சாற்ற வேண்டாம்



பதினாறு பழங்களும்
வேறுவேறு இனமென்றாலும்
இப்போது
ஒரு கூடைக்குள் இருந்தே
உறவு பற்றி பேசுகிறது.

காலங் கடந்தாவது
இந்தப் பழங்கள்
கலந்தாலோசித்ததே..
இலேசாக இனிக்கிறது..!
பழங்கள்
பாதுகாக்கப்படும் என்பதாலா..
எனும்
பயமும் தெரிகிறது..!

நல்ல பழங்களும்
நாளடைவில் நாறிப்போகும்
நாம்தான்
வேண்டாதவற்றை
வீசிவிட வேண்டும்.

பழ வியாபரி
படு புத்திசாலி
அழுகிய பழங்களையும்
சந்தைக்குள்
சாதுரியமாய் விற்று விடுவார்

நம்மிடத்தில்
நல்ல பழங்களும்
இல்லாமலில்லை..
தெரிந்தெடுப்பதற்குத்தான்
நாம்
தவறிவிடுகிறோம்..
03.05.2014

கவிதைக்கான செய்தி
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பிரதியைமச்சர் ஏ.ஆர்.எம்.காதர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகிய இரு முஸ்லிம்களும் கையொப்பமிடாமல் விட்டது இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பலரையும் கலைக்குள்ளாக்கியுள்ளது என முஸ்லிம் அரசியலாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment