16 April 2013

அத்தனையும் ஆகும் அவர்களுக்கு ! ஆனால்..

-மதியன்பன்-

ஆற்றுப் படுத்த முடியவில்லை
அழுது கொண்டிருக்கிறது
ஆத்மக்கள்..!

தோற்றுப் போய் விட்டோமா
என்றுகூட
எண்ணத் தோன்றுகிறது.

விட்டுக் கொடுப்பு
விளையாட்டில் இருக்கலாம்
ஆனால்
உயிரான மார்க்கத்தில்
ஒரு போதும் இருக்க முடியாது.


பொதுவாக
பலமே இல்லாத சேனையிடம்
நாம்
பலமிழந்து போனது ஏன்..?

படித்தவர்கள் தானே
முடிவெடுத்தார்கள்
பல நாட்கள் யோசித்த பின்னர்..
தலைவர்களின்
தடுமாற்றம் புரியவில்லை.

காலாவதியானது ஹலால்
காவியுடைக்குள்.
பர்தாக்கள் மட்டுமல்ல
இனி
பள்ளிவாயல்களும்
பறிபோய்விடலாம்.

ஒற்றுமைக்கும், அபிவிருத்திக்கும்
உடன் பட்டுப் போகலாம்
அதற்காக
மார்க்கததை அடகு வைக்கலாமா..?;

இஸ்லாம் என்ன
இரண்டாவது இன்னிங்சா
இடைநிறுத்திக் கொள்வதற்கு..

பாவம்
அமைச்சர்களைத் திட்டாதீர்கள்..
அவர்கள்
ஒன்றும் செய்ய முடியாது..
வாய்களில் பூட்டு
திறப்பு அலரி மாளிகைக்குள்..

அறைகுறை ஆடை
அனாச்சாரக் கலாச்சாரம்
விபச்சார விடுதி
வேண்டாத உறவும் கருக்கலைப்பும்
சாராயத் தவறனை
சத்தியம் மறந்த போதனை
அத்தனையும் ஆகும் அவர்களுக்கு..



ஆனால்
பள்ளிவாயல், மத்ரசா, பர்தா
இஸ்லாமிய வங்கி
இறைச்சி, ஹலால்
இவையெல்லாம் கூடாது.

கொஞ்சம் பொறுங்கள்..
தாடி, தலைப்பா, ஜூப்பா
சுன்னத் செய்தல், தாடிவைத்தல்
இவையெல்லாம்
தவணை முறையில் தடையென வரும்.

அப்போதும்
நம் தலைவர்கள்
உடன்படிக்கை பற்றியும்
ஒற்றுமை பற்றியும்.. ( ? )



- காத்தான்குடி -மதியன்பன் -

No comments:

Post a Comment