24 March 2013

உயிருக்கு ஆபத்தென்றால் ஒதுங்க முடியுமா..?


முஸ்லிம்களின்  உயிரிலும் மேலான முஹம்மது நபி ஸல் அவர்களை மோசமாக சித்தரித்து சினிமாப் படமெடுத்து மேற்குலகம் வெளியிட்டபோது அதனைக் கண்டித்து எழுதிய கவிதை



-மதியன்பன்-

இடிந்து போய் விட்டன இதயங்கள்.
இஸ்லாத்திற் கொதிராக
இறைத் தூதரை இழிவுபடுத்தி
உதவாத திரைப்படம் எடுத்தது
ஓடவிட்ட ஈனச் செயல் கண்டு
இடிந்து போய் விட்டன இதயங்கள்.


கொச்சைப் படுத்துவதற்காகவே
குறிவைத்து எடுத்த படம் இது!
படத்தின் ட்றைலரைப் பார்த்த போதே
பாவிகள் அழிய வேண்டும் என்று
பதறியது உள்ளம் பலமுறை

உயிருக்கு ஆபத் தென்றால்
ஒதுங்கிப்போக முடியுமா..?
உயிரிலும் மேலானவர் எங்கள்
உத்தமநபி  முஹம்மத் என்பதால்...
உலக முஸ்லிம்கள் இன்று
உணர்விழந்து நிற்கிறார்கள்.

காற்றுப் போகும் பலூன்களாய்
தோற்றுப் போகும் மேற்கத்தைய நாடுகள்
இப்போது
இஸ்லாத்தைக் குறிவைத்தே
தங்கள் இலக்கை திருப்பியிருக்கின்றன.

குர்ஆனை எரித்தவர்கள்
எங்கள் கோமான் நபிகளுக்கு
உருவம் வரைந்து குதூகலித்தவர்கள்
பள்ளிகளை உடைத்தவர்கள்
அதற்குள்
ஆயுத பலத்தை காட்டியவர்கள்
இப்போது
பலான படமெடுத்து
பார்த்து ரசிக்கிறார்கள்

இஸ்லாத்திற் கெதிராக
இழி செயல் செய்த போதெல்லாம்
இவர்கள்
பலமுறை மூக்குடைபட்டது
இன்னும் முற்றுப் பெறவில்லை.

புனித இஸ்லாம் வளர்வதை
பொறுத்துக் கொள்ள முடியாத
புல்லுருவிகள்
இப்படி
புதுப்புது ஐடியாக்கள் போடலாம்
இஸ்லாமிய தீபத்தை
வாயால் ஊதி அணைத்து விட
வரிந்து கட்டிக் கொள்ளலாம்
ஆனால்
அல்லாஹ்விடம் அவர்கள்
தோற்றே போவார்கள்

சத்தியம் தோற்றதாக
சரித்திரம் இல்லை
ஒரு நாள்
இந்தத் தரித்திரங்கள் எல்லாம்
தலை குணிந்து போகும்.
இழிவைக் காணும் நாட்கள்
இன்னும்
வெகு தூரத்தில் இல்லை.

கொஞ்சம் பொறுங்கள்
இந்தப் படத்தை
அமீர் தமழில் மொழி பெயர்க்கலாம்.
அமீர்கான், சல்மான்கான்
குஸ்பும் இணைந்து நடிக்கலாம்
மனோ இனிய குரலில் பாட
இதற்கு
றஹ்மான் இசை அமைக்கலாம்.

அமெரிக்கா சென்று
நமது நடிகர்கள்
அவாடை வாங்கிக் கொண்டு வரலாம்.
அப்போதும் நம்மில் பலர்
ஆர்வத்துடன் அணைத்து
அவர்களுக்கு
அன்பைப் பொழியலாம்.
அதற்கும்
ஒரு ஆர்ப்பாட்டம் தேவையல்லவா..?

No comments:

Post a Comment