03 June 2013

உனக்கும் எனக்கும் உரசிக் கொள்ளும் உறவு

-மதியன்பன்-


மறக்க முடியவில்லை உன்னை
மனதிலும்
மடியிலும் சுமந்திருப்பதால்..

என்
ஒவ்வொரு மூச்சிலும்
நீதான் சுவாசிக்கப்படுகிறாய்..
அதை நான்
விசுவாசித்துக் கொண்டிருப்பதால்..


ஒவ்வொரு நாளும்
உன் நினைவோடுதான்
நான்
உறங்கப் போகிறேன்.

கனவில் கூட
நீ
கட்டில் வர மறுக்கிறாய்..
காலம் வரட்டும் என்று
காத்திருப்பதாலா..?

விருப்பமில்லாவிட்டாலும்
நான்
விழித்துக் கொள்கிறேன்.
நீ கனவில் கூட
காட்சி தரரவில்லை என்பதற்காக..

சத்தியமாய்
நான் சாக மாட்டேன்
உன்னை சந்திக்கும் வரை..

என்னை நீ
அரவணைத்துக் கொள்ளும்
அந்ந நாள்
எனக்கு இறுதி நாளாகும்
அதுவரை காத்திருக்கிறேன்
அமைதியாக..

சொர்க்கமோ நரகமோ
கூட்டிப்போவது நீ என்பதால்
கூட வரக்
காத்திருக்கிறேன் நான்..

என் உயிர்
இறைவனிடம் என்றாலும்
எடுப்பது நீதானே..!

அதனால்
ஆசைப்படுகிறேன்
உன்னை நான்
மடியில் சுமந்த மரணம் என்பதால்..

03.06.2013






1 comment: