24 March 2013

அக்கினி வெயிலுக்கே அசையாதவன் ஊமை வெயிலுக்கா உருகப் போகிறான்.


கல்முனை கடற்கரைப் பள்ளிவாயல் தொடர்பாக நான் எழுதிய கவிதை வன்செயலுக்கு காரணமாக அமைகிறது என்றும் அதைப் பிரசுரித்த காத்தான்குடி இன்போவும், சிங்களப் பேரினவாதிகளின் ரிங்கிரி பிராந்திய வானொலியும் ஒன்றுதான் என்றும் காத்தான்குடி நகர சபை உதவித் தவிசாளர் ஜெஸீம் அவர்கள் காத்தான்குடி இன்போவை கண்டித்து அறிக்கை விட்டபோது  எழுதிய கவிதை

 - மதியன்பன் -

உதவித் தவிசாளருக்கு
ஒரு விண்ணப்பம்
ஹறாத்தைக் கண்டித்து
கவிதை எழுதியது நான்.
ஆனால்
தண்டிப்பது இன்போவை ஏன் ?
எய்தவன் நானிருக்க
அம்பை நோவதில்
அர்த்தமென்ன இருக்கிறது..?


இது ஒன்றே போதும்
உங்கள் அறிவுத்தனத்தை
அளவீடு செய்வதற்கு..
கருத்துக்குப் பொறுப்பு
அதனை
ஆக்கியோனே தவிர
வெளியிடும் ஊடகமல்ல
என்பதைக்கூடவா
உங்களால்
உணர்ந்து கொள்ள முடியவில்லை..?

மார்க்கத்திற்கு விரோதமென்றால்
அதைக்
கண்டிக்கவும், தண்டிக்கவும்
மதியன்பனுக்கு மட்டுமல்ல
ஈமான் கொண்ட
எல்லோருக்கும்
இடப்பட்ட கட்டளைதான்.
இதைத்தான்
என்னைப் போல்
இன்போவும் செய்திருக்கிறது
புரிந்து கொண்டவர்கள்
ஏராளம் என்பதை
கருத்துக்கள் காட்டுகிறதே..!

ஊடகத்தை கண்டிக்கும்
உதவித் தவிசாளரே!
இது வென்ன நாடகமா
நடித்துவிட்டுப் போவதற்கு...!

உங்கள் கருத்துக்குப் பிறகுதான்
பலர்
கல்முனை தர்ஹா பக்கம்
காறித் துப்பியதாக
காற்றிலே செய்திகள்
கலந்து வருகிறது...

ரிங்கிரியும் இன்போவும்
உங்கள் பார்வையில்
ஓன்றாக இருக்கலாம்
ஈமான் உள்ளோரால் மாத்திரமே
வேறுபாட்டை
விளங்கிக் கொள்ள முடியும்.

ஊருச் செய்திகளை
உடனுக்குடன் அறிவதற்கு
இன்போவை
இதயத்துள் சுமப்பவர்கள் ஏராளம்
பலருக்கு பார்க்காவிட்டால்
படுக்கையே கசந்து போகும்

இன்போவை
கண்போல காப்பவர்களுக்கு
உங்கள் கருத்தும் கண்டிப்பும்
பெருத்த
வேதனையையும், வெறுப்பையும்
விளைவாய் கொடுத்திருக்கிறது

என்ன பிழை
கவிதையில்..கண்டீர்கள் ?
கல்முனை தர்ஹாவின்
கன்றாவித் தனத்தை யொல்லாம்
கவிதையாக்குவதென்றால்
காவியம்தான் பாட வேண்டும்.

தர்ஹாவை
இடிக்கச் சொன்னதற்கே
இடிந்து போகும் நீங்கள்
பள்ளியை உடைத்தபோது
பர்ர்த்துக் கொண்டிருந்தது
எந்த வகையில் ஈமானாகும்..?

ஈமானுக்காக
எதையும் இழக்கலாம்
எதற்காகவும்
ஈமானை இழக்க முடியாது.
அல்லாஹூ அக்பர்!!!

நன்றி – காத்தான்குடி இன்போ

No comments:

Post a Comment