மதியன்பன்
விமானம்
விழுந்ததா
கடத்தலா
காற்றில் பறக்கிறதா..?
இன்னும்
விளக்கம்
தெரியாமல்
வியப்பில்
கிடக்கிறது உலகம்...
அதி உயர
அண்டனாவையும்
டவரையும்
நம்பிய
அமெரிக்கா கூட
இப்போது
வெம்பிப்போய்
விழி பிதுங்கி நிற்கிறது...
சாட்டலைட்டில்
சாதித்தவர்களெல்லாம்
இப்போது
சாத்திர
காரர்களிடம்
சரணடைந்து
கிடக்கிறார்கள்..
ஊடகங்களும்
இதனை ஊதிப் பெரிசாக்கி
நமக்கு
நாடகக்
காட்சிகளாய்
நாளாந்தம்
தந்து கொண்டிருக்கிறது.
தேடும்
பணிகள் கூட
இனிமேல்
தேவையற்றதாய்
போய்விடலாம்
ஓடும் விமானங்களும்
தாமாகவே
ஓய்வெடுத்துக்
கொள்ளலாம்.
உலகம்
சில விடயங்களை
சீக்கிரம்
புரிந்து கொள்ளும்
மறை ஞானம்
இறைவனுக்கு
மட்டும்தான்
என்பதை
இனியாவது
உலகம் ஏற்றுக் கொள்ளும்
எங்கோ
தொழில்
நுட்பத்தையும்
தாண்டிய
தூர நோக்கு உள்ளதென்பதை
இனியாவது
உலகம் விளங்கிக் கொள்ளும்.
எங்களால்
எதையுமே
சாதிக்கலாம்
என்ற
மமதை கொண்டவர்களின்
மலட்டுத்
தன்மை
மழுங்கிப்
போய் விடும்
எமை மிஞ்சிய சக்தியொன்று
எங்கோ இருப்பதை
இனிமேல்
உலகம்
எளிமையாய்
ஏற்றுக் கொள்ளும்.
No comments:
Post a Comment