12 May 2013

பெட்டைகளின் உடுப்பும் பெடியங்களின் கடுப்பும்

-மதியன்பன்-


பெட்டைகளின் இடுப்பும் 
அதுகள் போடுற உடுப்பும்
எங்கிட பொடியன்மார
கடுப்பேத்துதாம்



நாகரீகம் மிஞ்சிப்போய்
அவங்கிட உடுப்பெல்லாம்
நடுவால பிஞ்சி போச்சுதாம்.



ஜன்னல் வச்ச சட்டை கூட
இப்போ
ஜட்டியை விட சின்னதாச்சுதாம்.

இடுப்புத் தெரிய
பொம்புள கட்டுற
புடவையைப் பார்த்து
இளசுகள்
இடைத்தேர்தல் நடத்துதாம்.

இளைஞர்கள்
படிப்பெல்லாம்
யுவதிகளின்
இடுப்பின் மடிப்போடு
இறங்கிப் போச்சுதாம்.

பெட்டைகள் உடுப்பு
குறைய குறைய
பெடியங்கள் மனசு
நிறைஞ்சு போகுதாம்.

இப்படியே போனா
ஒரு நாள்...?

(நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்)

No comments:

Post a Comment