
குயில்கள்
கூட்டை விட்டு வெளியேறியதால்
குழப்பத்தில் கிடக்கிறது காக்கைகள்
எஞ்சிருக்கும் குயில்கள்
ஏமாறாதிருக்க
புதிய இருக்கைகளையும்
போட்டுக் கொடுக்கிறது அவைகள்.
காக்கைகளின் கூடு
கலைக்கப்படக்கூடும்
ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன.
அண்டங் காக்கையின்
மண்டையில்
எதுவும் ஏறுவதாகவும் தெரியவில்லை.
வெறிபடித்து
விரக்தியில் ஆலாய்ப் பறக்கிறது.
காக்கைக் குங்சிகளுக்கு
இப்போதெல்லாம்
கட்சிதமாய் சாப்பாடு கிடைக்கிறது
நலிந்தவையெல்லாம் பெருத்துக் கிடக்கின்றன.
கூட்டைக் கலைத்து விட்டு
புதிய கூட்டைக் கட்டிக் கொள்ள
அண்டங்காக்கைக்கு
அல்லக் காக்கைகள்
ஆலோசனை வழங்குகின்றன.
கொக்கரித்த
குறுட்டுக் காக்கைகளுக்கு
அடக்கி வாசிக்கச் சொல்லி
அண்டங்காக்கை
அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பச்சோந்திக் காக்கைகள்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
எப்போது
நிறைத்தை மாற்றிக் கொள்ளலாமென...!
சில காக்கைகளின்
இடுப்புப் பட்டி
அண்டங் காக்கையிடம்
அகப்பட்டுக் கொண்டதால்
வெளியேற முடியாமல்
வேதனைப் பட்டுக் கிடக்கிறது.
எப்படியோ...
அண்டங்காக்கையின்
அதிகாரத்தைப் பறித்து விட்டு
ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ள
குயில் கூட்டம்
குறிவைத்துக் காத்திருக்கிறது.
24.11.2014
No comments:
Post a Comment